×
  • Home
  • Course
  • Teach for Nature
  • மிஷன் இயற்கை (Mission Eeyarkai)

மிஷன் இயற்கை (Mission Eeyarkai)

4/5 - (82)

நமது பூமி அனைத்து உயிரினங்கள் வாழும் சிறந்த இடமாக இருப்பதற்கான உங்கள் பங்கை அளிக்க நீங்கள் எப்பொழுதும் நினைத்தது உண்டா? அனைவருக்கும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க நீங்கள் உதவ விரும்புகிறீர்கள், ஆனால் எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா? மிஷன் இயற்கைக்கு உங்களை வரவேற்கிறோம்! மிஷன் இயற்கை என்பது தனிப்பட்ட மற்றும் கூட்டு நடவடிக்கையின் மூலம் ஒரு நிலையான உலகத்தை உருவாக்குவதற்கு ஒரு இயக்கம் மற்றும் அதற்கான உங்கள் பங்களிப்பை பகிர்வதற்கான இடமாகும். இந்த பணியில், மக்களும் இயற்கையும் நல்லிணக்கத்துடன் செழித்து வளரும் எதிர்காலத்தை உருவாக்க நீங்கள் உதவலாம்! ஒவ்வொரு செயலின் மூலம், உங்கள் பசுமைத் திறனை வெளிக்கொணர்ந்து நமது பூமியை காப்பாற்ற உதவும் நேரம் ஆகும்.

A Self-paced Course By : WWF-INDIA

English Course Hindi Course Assamese Course

What you will learn

  • இயற்கையை ஆராய்தல், உற்றுநோக்குதல், புரிந்து கொள்ளுதல் மற்றும் உங்களை சுற்றியுள்ள உலகத்துடன் ஈடுபடுதல். (To explore, observe, understand, and engage with nature and the world around you)
  • நிலையான வளர்ச்சிக்கான அன்றாடப் பழக்கங்களை மற்றும் செயல்களை வளர்த்துக் கொள்ளுதல். (To develop everyday habits and behaviour for sustainability)
  • நிலையான வளர்ச்சிக்காக பங்களிக்க தனியாகவும் .மற்றும் கூட்டாகவும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதித்து பிரதிபலிப்பது. (To discuss and reflect on how to act both individually and collectively to contribute to sustainability)
  • பசுமை பள்ளி மற்றும் சமூகம் உருவாக்க தேவையான நடைமுறை சிந்தனைகள் மற்றும் தீர்வுகளை வளர்த்து கொள்ளுதல். (To develop practical ideas and solutions for creating sustainable schools and communities)
  • நடவடிக்கை எடுக்க மற்றவர்களை ஊக்குவிக்கும் சுற்றுச்சூழல் தூதர்களாக மாறுதல். (To become eco-ambassadors who inspire others to take action)
Current Status
Not Enrolled
Price
Free
Get Started

விரிவான  விளக்கம் (Course Description)

நமது பள்ளிகள்,  சமூகங்களை பசுமையாக்கி, நிலையான உலகைக் கட்டமைக்க மாணவர்கள் தலைமையிலான இயக்கமான மிஷன் இயற்கைக்கு வரவேற்கிறோம். 

இந்த செயல் முறை திட்டம் உங்கள் பள்ளி மற்றும் சமூகங்களில் மிஷன் இயற்கையை  தொடங்க உங்களைத் தயார்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு பாடத்திட்ட பகுதிகள் மூலம், மிஷன் இயற்கையின்  கொள்கைகள் மற்றும் நம் நாட்டின் பல்லுயிர்த்தன்மையை எவ்வாறு ஆராய்வது மற்றும் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையுடன் எவ்வாறு இணைந்திருப்பது, பள்ளியில் உள்ள அனைவரையும் எவ்வாறு ஈடுபடுத்துவது மற்றும் கற்றுக்கொண்டதை விரிவுபடுத்தி சமுதாயத்தை பசுமையாக்குதல் போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம். 

மிஷன் இயற்கை ஏன்?  (Why Mission Eeyarkai?)

நாமும் மற்ற உயிரினங்களும் நமது வாழ்வின் ஒவ்வொரு தேவைக்கும் பூமியை சார்ந்திருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, மனித நடவடிக்கைகள், நிலம், நீர் மற்றும் காற்று மாசு,. பல உயிரினங்களின் வாழ்விட இழப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை குறைவுக்கும் காரணமாகியுள்ளது.  

ஆனால் எல்லாவற்றையும் நாம் இழக்கவில்லை!  நாம் மாற்றத்தைக் கொண்டு வர இயலும். நாம் ஓவ்வொருவரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்,  மற்றவர்களோடு சேர்ந்து பணியாற்றுவது மூலமான நமது சிறு கூட்டு முயற்சிகள் நமது சுற்றுச்சூழலில்  ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 

மிஷன் இயற்கை, பள்ளி மாணவர்களை பசுமைப் பள்ளிகளை உருவாக்கவும், அவர்களின் சமூகங்களை பசுமை சமூகங்களாக மாற்றுவதற்கும் பணியாற்ற தயார்படுத்துகிறது. 

பள்ளிகள் இளம் உள்ளங்களை வடிவமைத்து,, நமது எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நண்பர்கள், சகமாணவர்கள்  மற்றும் ஆதரவான பெரியவர்கள் என ஒரு சிறிய சமூகத்தை குழந்தைகள் கண்டுபிடிக்கும் இடங்களாக பள்ளிகள் உள்ளன. மேலும், அவர்களின் உதவியுடன் சுற்றுச்சூழலில் நாம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றி அறியவும், அதை சரி செய்து பசுமை பள்ளி உருவாக்குவதற்கான இயக்கத்தை தொடங்கவும் இயலுகிறது. இந்த மாணவர்கள் பின்னர் அவர்களின் திறமைகளை வலுப்படுத்தி  உள்ளூர் சமூகங்களை  பசுமை சமூகங்களாக மாற்றுவதற்கான தங்கள் முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கு தயாராகின்றனர். எனவே, மிஷன் இயற்கை பயணத்தில் இயற்கையுடன் இணைதல், பசுமையான பள்ளியை உண்டாக்குதல்   பசுமையான சமூகத்தை உருவாக்குதல் ஆகிய மூன்று முக்கிய படிகள் அடங்கும்.   

இந்தப் பணியின்போது நீங்கள் செய்த சாதனைகள், 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்குகளின் தொகுப்பான நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைய உதவும். ஐ நா சபையின் நிலையான இலக்குகள் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதையும், பூமியைப் பாதுகாப்பதையும், 2030 க்குள் அனைத்து மக்களும் அமைதியையும் செழிப்பையும் அனுபவிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. 

மிஷன் இயற்கையில்  எவ்வாறு சேர முடியும்? (How can one join Mission Eeyarkai?)

மிஷன் இயற்கையின் உறுப்பினராக ஆவதன் மூலம், நீங்கள் ஒரு இயற்கை சாதனையாளராக மாறுவதற்கான உங்கள் பயணத்தைத் தொடங்குவீர்கள்! உங்கள் வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்துடன் நீங்கள் செய்யக்கூடிய செயல் திட்டங்களுக்கும் மற்றும் நடைமுறை யோசனைகளுக்கும் மிஷன் இயற்கையின் கையேட்டை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த ஏடு உங்கள் பசுமை இயக்கத்தை விரைவுபடுத்த உதவும். 

உங்களால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்! மிஷன் இயற்கை திட்டத்தில் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். (Click here to sign up for Mission Eeyarkai. )

A, சுற்றுச்சூழல் நடவடிக்கையின் மையப்பகுதியில்  ‘உங்களை’ வைக்கும் கட்டமைப்பு (A FRAMEWORK THAT PUTS ‘YOU’ AT THE HEART OF ENVIRONMENTAL ACTION)

மிகவும் நிலையான உலகத்திற்கான மிஷன் இயற்கையின் பாதை தனிப்பட்ட நடவடிக்கையுடன் தொடங்கி, பள்ளிக்கும், இறுதியில், சமூகத்திற்கும் விரிவடைகிறது. உங்கள் பணி மூன்று நிலைககளைக் கொண்டிருக்கும் . 

நம் நாட்டின் பல்லுயிர் பற்றி அறிதல்  (Knowing Our Country )

உலகில் உள்ள மொத்த இனங்களில் 7-8% உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நமது இந்த பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் உலகில் வேறு எங்கும் காணப்படாத இங்கு மட்டுமே காணப்படும் பல இனங்களும்  உள்ளன. இவை எவை என்று உங்களுக்குத் தெரியுமா? நமக்குத் தெரிந்ததையும், அக்கறை காட்டுவதையும் நாம் பாதுகாக்க அதிக வாய்ப்புள்ளது. அதனால்தான் மிஷன் இயற்கை பயணத்தில் உங்கள் முதல் படி நமது நாட்டின் வளமான பல்லுயிர் பெருக்கத்தைப் பற்றி அறிவதாகும். உங்கள் உள்ளூர் பல்லுயிர் பெருக்கம் மற்றும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைப் புரிந்துகொள்வது அவற்றின் மீதான உங்கள் செயல்களின் தாக்கங்களை அடையாளம் காணவும், இவற்றை எவ்வாறு சரி செய்ய முடியும் என்பதை பகுப்பாய்வு செய்யவும் உதவும். 

நமது பசுமை பள்ளி (Our Green School)

மிஷன் இயற்கை மூலம், உங்கள் பள்ளியை சுற்றுச்சூழலுக்கு உகந்த இடமாக மாற்றலாம். இந்த இயக்கம் நமது பசுமை மதிப்புகளை வளர்ப்பதன் மூலம் நமது நடத்தை மற்றும் தேர்வுகளை வழிநடத்துகிறது, இதனால் நாம் இன்னும் நிலையான வளமான முறையில் வாழலாம். மிஷன் இயற்கை ஒரு பசுமைப் பள்ளியைக் உருவாக்குவதற்கு 360 டிகிரி அணுகுமுறையைப் பயன்படுத்துவதுடன் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துகிறது 

நமது  பசுமைச் சமூகங்கள் (Our Green Communities )

மிஷன் இயற்கை பயணத்தின் மூன்றாவது கட்டமானது  கற்றல்களை விரிவுபடுத்தி அவற்றைப் சமூகத்தில் செயல்படுத்துவதாகும் . மிஷன் இயற்கை  உங்கள் பள்ளியில் மட்டுமல்லாமல், உங்கள் குடும்பம், சுற்றுப்புறத்தில் மற்றும் பெரிய சமூகத்திலும் சுற்றுச்சூழல் தூதராக இருக்க உங்களை ஊக்குவிக்கிறது. ஒரு சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் பசுமையான இடங்களை உருவாக்குவதன் நன்மைகளைப் புரிந்து கொள்ளும்போது, அவர்கள் ஒன்றைக் உருவாக்குவற்கும் சமூகத்தை ஒரு பசுமை சமூகமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும். 

Loading...

35425